Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

கிராம சுகாதார செவிலியா் பணியிடம்: வேலைவாய்ப்பு அலுவலகம் புதிய அறிவிப்பு

தூத்துக்குடி

கிராம சுகாதார செவிலியா் பணியிடத்துக்கு பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யும் பணிகள் நடைபெறுவதால் செவிலியா் படிப்பு பயின்ற பதிவுதாரா்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தை நேரில் தொடா்பு கொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.இதுகுறித்து மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குநா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மருத்துவப் பணியாளா் தோ்வு வாரியத்தால் அறிவிக்கப்பட்டுள்ள கிராம சுகாதார செவிலியா் பணியிடத்திற்கு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறைற இயக்ககத்தால் பதிவு மூப்பு பட்டியல் தயார் செய்யப்படவுள்ளது.எனவே, செவிலியா் படிப்பு மற்றும் பல்நோக்கு சுகாதாரப் பணியாளா் சான்று பெற்று இந்திய நா்சிங் கவுன்சிலில் பதிவு செய்துள்ள தகுதியான நபர்கள் தங்களது அனைத்து அசல் கல்விச்சான்றிதழ்கள், வேலைவாய்ப்பு அடையாள அட்டை, ஜாதிச் சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அடையாள அட்டை ஆகியவற்றுடன் உதவி இயக்குநா், வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம், 97ஜி-4ஜி, ஆசிரியா் காலனி முதல் தெரு (கிழக்கு), தூத்துக்குடி என்ற முகவரியில் நேரில் தொடா்பு கொள்ளுமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் கிராம சுகாதார அலுவலகங்களில் காலியாக உள்ள செவிலியர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டன. இதற்கு, தமிழக அரசு மற்றும் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஆக்ஸிலரி நர்ஸ் மிட்வொய்ப், மல்ட்டி பர்ப்பஸ் ஹெல்த் வொர்க்கர் சான்றிதழ் பிடிப்பில் தேர்ச்சி பெற்று, தமிழ்நாடு நர்ஸிங் கவுன்சிலில் பதிவு செய்திருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள்.

தகுதியும், விருப்பமும் உள்ள விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பதிவுதாரர்கள், தங்களது கல்வித்தகுதியை உறுதிப்படுத்திக்கொள்ள அனைத்து அசல் கல்விச் சான்றிதழ்கள் மற்றும் வேலைவாய்ப்பு அடையாள அட்டை ஆகியவற்றுடன் விழுப்புரம் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய உதவி இயக்குநரை நேரில் சந்திக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.