Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

TET தேர்வு ரத்து..? TRB அதிகாரிகள் ஆலோசனை


99  சதவீதம் பேர் தோல்வியடைந்ததால் டிஇடி தேர்வை ரத்து செய்துவிட்டு புதிதாக தேர்வு நடத்தலாமா என டிஆர்பி அதிகாரிகள்  ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

 தமிழகத்தில் 2019 ஆம் ஆண்டிற்கான டிஇடி தேர்வு கடந்த ஜூன் 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.  முதல் தாளுக்கு 1.62 லட்சம் பேரும்  இரண்டாம் தாளுக்கு 3.9 லட்சம் பேரும் தேர்வு எழுத விண்ணப்பித்திருந்தனர்.  இதற்கு முந்தைய ஆண்டுகளில் நடைபெற்ற டி.இ.டி. தேர்வுகளில் 80 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தேர்ச்சி பெற்று ஆசிரியர் வேலைக்காக காத்துக் கொண்டிருக்கின்றனர்.  இந்நிலையில் இந்த தேர்வில் தேர்ச்சி பெறுவோரின் எண்ணிக்கையை குறைக்க டிஆர்பி திட்டமிட்டது.

இந்த ஆண்டு நடைபெற்ற டிஇடி தேர்வில் 5 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறுவார்கள் என ஆசிரியர் தேர்வு வாரியம் எதிர்பார்த்தது.   ஆனால் முதல் தாளில் 98.6 இரண்டு சதவிகிதம் பேரும் இரண்டாம் தாளில் 99.92  சதவீதம் பேரும் தேர்ச்சி பெறவில்லை.

இந்நிலையில் குறிப்பிட்ட இந்த தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு என்பதாலும்  தேர்வர்களின் மனநிலையை கருத்தில் கொண்டும் இந்தத் தேர்வை ரத்து செய்துவிட்டு மீண்டும் புதிய தேர்வு நடத்தலாம் என்பது குறித்து டிஆர்பி அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நன்றி: தினகரன்