Header Ads Widget

Responsive Advertisement

Ticker

6/recent/ticker-posts

+2 கல்வித்தகுதிக்கு இந்திய விமானப்படையில் வேலைவாய்ப்பு

          indian air force recruitment
  

    இந்தியாவின் மிகப்பெருமை வாய்ந்த விமானப்படையில் Airmen பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தஞ்சாவூரில் நடைபெறும் வேலைவாய்ப்பு Rally -ல் +2 முடித்தவர்கள் நேரில் கலந்து கொள்ளலாம்.


பணியின் தன்மை : மத்திய அரசு வேலை

பணியின் பெயர் : AIRMEN (Group X, Group Y)

கல்வித்தகுதி : +2 / Diploma அல்லது அதற்குச் சமமான கல்வித்தகுதி

சம்பள விகிதம் : பயிற்சியின் போது 14600/மாதம். பயிற்சி முடிந்த 
                                           பின் 33100 + DA

வயது வரம்பு : 14 ஜுலை 1998 முதல் 26 ஜூன் 2002 தேதிகளுக்குள் பிறந்தவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர்கள் ஆவர்.

திருமணம் ஆகாத இளைஞர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.

நடைபெறும் நாள், இடம்  

       23 ஜூலை 2018 முதல் 28 ஜூலை 2018 வரை அன்னை சத்யா ஸ்டேடியம், தஞ்சாவூர்


எந்தெந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்

            ஜூலை 23 ஆம் தேதி நடைபெறும் தேர்வு முகாமில் சென்னை, கோயம்புத்தூர், காஞ்சிபுரம், கரூர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், பெரம்பலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவள்ளூர், திருவாரூர், திருவண்ணாமலை, திருச்சி, திருப்பூர், வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம்.

            ஜூலை 26 ஆம் தேதி நடைபெறும் தேர்வு முகாமில் கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, காரைக்கால், நாமக்கல், மதுரை, புதுச்சேரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தேனி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


தேர்வு செய்யப்படும் முறை

                  உடற்தகுதித் தேர்வு மற்றும் எழுத்துத் தேர்வு முறை மூலம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். 

Rally-க்கு எடுத்துச் செல்ல வேண்டிய ஆவணங்கள்

            ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் அசல் மற்றும் நகல் சான்றிதழ்களுடன் Passport அளவு புகைப்படம் எடுத்துச் செல்லவும்.